கமலுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்!

Kajal aggarwal to work with kamal hassan

by Mari S, Nov 5, 2018, 09:43 AM IST

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் இந்தியன். இந்த படம் வெளியாகி பல வருடங்கள் கடந்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கவுள்ளார். பிக்பாஸ் ஷோவில் இதுகுறித்த அறிவிப்பை கமல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

ஊழல் செய்பவன் தனது மகனாக இருந்தாலும் கொல்லும் இந்தியன் தாத்தாவாக கமல் இந்தியன் படத்தில் மிரட்டியிருந்தார். இரண்டாம் பாகம் மாறுபட்ட கதையுடன் வரவுள்ளதா? இல்லை முதல் பாகத்தின் தொடர்ச்சியா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த படத்திலும் கமல் இரு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது.

இப்படத்திற்கு கமலுக்கான ஹீரோயின் தேடுதல் நடைபெற்றது. நயன்தாராவிடம் அப்ரோச் செய்யததாகவும், அவர் சில கண்டிஷன்கள் போட்டதால், அவரை டிராப் செய்ததாகவும், அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உலா வருகின்றன. இந்நிலையில், தற்போது, காஜல் அகர்வாலை படத்தின் நாயகியாக கமீட் செய்துள்ளதாகவும் ஒரு செய்தி வந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காஜல் அகர்வால், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். ரஜினி, கமல் படங்களில் மட்டும் இன்னும் நடிக்கவில்லை. இந்த செய்தி உறுதியானால், கமலுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவார் காஜல் அகர்வால்.

 

You'r reading கமலுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை