காலையில் எழுந்தவுடன் நாம் கேட்கின்ற முதல் வார்த்தை மற்றும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய வார்த்தை "பிரஷ்" பண்ணு. ஆனால் உண்மையில் சொல்லபோனால், நாம் காலையில் பல் துலக்குவது தவறான செயலாகும்.
என்னது தவறா? ஆமா வாங்க அதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.
நாம் மூதாதையர்கள் முதல் இன்று வரை, பகலில் மட்டுமே பல்துலக்கும் வழக்கத்தை கொண்டுள்ளோம். ஆனால் அதனால் எந்த ஒரு பயனும் இல்லை. கிருமிகளின் தாக்கம் இரவு நேரங்களில் மட்டுமே அதிகமாக இருக்கும்.
நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களான பிஸ்கட்டுகள், இனிப்பு மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம்கள், கேக் மற்றும் பேக்கரி பொருட்களை உண்ணும்போது அவை எளிதில் பல் இடுக்குகளில் மாட்டிக்கொள்கிறது. இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அப்பொருட்களுன் சேர்ந்து வாயில் லாக்டிக் அமிலத்தை சுரக்க செய்கிறது.
இந்த லாக்டிக் அமிலமானது நமது பற்களில் உள்ள எனாமலை அழித்து பற்களை சொத்தையாக்குகின்றன.அதோடு மட்டுமின்றி நம் பற்கள் மற்றும் ஈறுகளில் வலியை ஏற்படுத்துகிறது.
நம் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முழு காரணம், காலையில் பல் துலக்குவதே. அதனால் காலையில் பல் துலக்கும் பழக்கத்தை விட்டுவிடுவது நல்லது.
இரவில் நாம் தூங்கிய ஒரு மணி நேரத்தில் கிருமிகள் பற்களை சொத்தையாக்கும் வேலையை துவங்குகிறது. அதாவது நம் வாயை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மூடியிருக்கும் போது கிருமிகள் பற்களில் உட்புகுந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு பற்களையும் சொத்தையாக்கிவிடுகிறது.
இதனால் காலையில் பல்துலக்கி என்ன பயன்?இரவு நேரங்களில் பல் துலக்கி படுக்கைக்கு செல்வது சிறந்தது. மேலும் காலையில் சுடுநீர் அல்லது சுடுநீருடன் உப்பு கலந்து வாயை கொப்பளித்தால் போதுமானது.
இதுபோன்று தினமும் செய்கையில் நம் பற்கள் நீண்ட காலம் பாதுகாக்கப்படுகிறது.