காதல் முறிவுக்குக் கூட கண் கலங்காத நாம், முடி உதிர்வு என்று வந்தால் அவ்வளவுதான், இந்த உலகமே இருண்டு விடும். இப்படி ஒருபுறம் இருக்க அண்மையில் பெங்களூருவில் முடி உதிர்தல் காரணமாக பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. இக்கால உணவின் காரணமாக இளம் வயதிலேயே முடி உதிர்வு மற்றும் இளநரை போன்றவை ஏற்படுகின்றன.
இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள என்ன செய்யலாம்? விலை உயர்ந்த பொருட்களை வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டிலுள்ள ஒரு சில பொருட்களே போதும், உங்கள் தலை முடி உதிர்வை தடுத்து, அடர்த்தியான கூந்தலை தருகிறது.
சரி, வாங்க அந்த பொருட்கள் என்னென்ன மற்றும் எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்றுபார்ப்போம்.
தலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்த
முடி உதிர்வு பிரச்சனை தான் இப்பொழுது பெரும்பிரச்சனையாக உள்ளது, முதலில் அதனை தீர்க்க, ஒரு இஞ்சி துண்டை எடுத்து, தலையில் நேரடியாக ஸ்கால்பில் தேய்க்க வேண்டும். சிறிது நேரம் தேய்தால் போதுமானது. பின் 10 -15 நிமிடம் கழித்து தலைமுடியை நன்கு அலச வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்கையில் முடி உதிர்வு முழுவதுமாக நின்றுவிடும்.
பொடுகு தொல்லை நீங்க
இஞ்சி சாற்றால் தலையில் மசாஜ் செய்யும் போது அதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் தன்மை, ஸ்கால்பில் சுரக்கும் எண்ணெயின் அளவைக் குறைத்து, பொடுகை தடுக்கிறது.
கண்ணாடி போன்று தலைமுடியைப் பெற
பொலிவான தலைமுடிக்கு, இஞ்சி சாற்றுடன் கொஞ்சம் ஆலிவ் ஆயில் சேர்த்து, தலையில் தடவி 1 மணி நேரம் ஊறவைத்து, பின் ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
வறட்சியான முடியை போக்க
உங்க தலை முடி வறண்டு இருக்கும் போது, இஞ்சி சாறுடன் ஆர்கன் ஆயிலை கலந்து தலைமுடியில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து, குளிக்கும் போது தலை முடி வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.
சரி, இந்த குறிப்புகளை படிப்பதோடு நிறுத்திவிடாமல் வீட்டினில் செய்து பாருங்கள், கண்டிப்பாக பலன் கிடைக்கும்.