தெலுங்கானாவில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து தம்மை எதிர்த்த சந்திரபாபு நாயுடுவை பழி தீர்க்க ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சியுடன் கூட்டணி வைக்க சந்திரசேகர் முடிவு செய்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் தெலுங்கானாவில் கூட்டணி வைத்தது போல் காங்கிரசுடன் கூட்டணி வைக்கிறார் சந்திரபாபு நாயுடு . தெலுங்கானாவில் காங்.உடன் கூட்டணி சேர்ந்தும் சந்திரசேகர் ராவை வீழ்த்த முடியவில்லை.
அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக கே.சி.ஆர்.முதல்வராகி விட்டார். தெலுங்கானா தேர்தலில் தம்மை காங்கிரசுடன் சேர்ந்து எதிர்த்த நாயுடுவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த கே.சி.ஆர். ஆந்திராவில் தக்க பதிலடி கொடுக்கப் போவதாக சவால் விட்டிருந்தார். அதன்படி ஆந்திராவில் செல்வாக்காக உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணிக்கு தயாராகி விட்டார்.
முதற்கட்டமாக கே.சி.ஆரின் மகனும் டி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் இன்று ஜெகன் மோகனை சந்திக்கிறார்.