பீகாரில் மணமேடைக்கு போதையில் தள்ளாடியபடி வந்த மணமகனை ஏற்க மறுத்து மணமகள் ஓட்டம் பிடித்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
பீகாரின் பாகல்பூரில் போலீசாக பணிபுரியும் உதய் ராஜக் என்பவருக்கு திருமணம் ஏற்பாடாகி இருந்தது. திருமணத்திற்கு முன் தினம் இரவு முழுவதும் தனது நண்பர்கள் களுக்கு தடபுடல் விருந்தளித்து தானும் உற்சாகத்தில் மிதந்துள்ளார்.
காலையில் மணமேடைக்கும் தள்ளாட்டத்தில் வந்துள்ளார். உடன் வந்த நண்பர்கள் போதை மிகுதியில் ஆட்டம் போட்டு ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர். இதைக்கண்ட மணமகள் இந்த மாப்பிள்ளையே வேண்டாம் எனக்கூறி விட்டார். இதனால் ஆத்திரத்தில் மணமகனின் நண்பர்கள் பெண் வீட்டார் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதில் பெண்ணின் உறவினர்கள் சிலரும் காயமடைந்தனர்.
இதனால் போலீசில் புகார் செய்யப்பட்டு போலீஸ் மாப்பிள்ளை ஜெயிலில் கம்பி எண்ணுகிறார். பீகாரில் கடந்த 3 ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் உள்ளது. மீறுபவர்களுக்கு ஜெயில் தண்டனை என்பதால் போலீஸ் மாப்பிள்ளையும் சிறையில் அடைக்கப்பட்டார்.