காஷ்மீரில் வீர மரணமடைந்த 2 தமிழக வீரர்களின் உடலுக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்கு!

காஷ்மீரில் பாக்.ஆதரவு தீவிரவாதி வெறிச்செயலால் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த சவாலப்பேரியைச் சேர்ந்த வீரர் சுப்பிரமணியன் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ராணுவ வாகனத்தில் சவாலப்பேரிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின் முழு ராணுவ மரியாதையுடன் வீரர் சுப்பிரமணியின் உடல் தகனம் செய்யப்படுகிறது. சுப்பிரமணியின் மரணச் செய்தி அறிந்தது முதலே சவாலப்பேரி கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதே போன்று வீர மரணம் எய்திய அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த வீரர் சிவச்சந்திரனின் உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டு சொந்த ஊரில் முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை இன்று காலை கார்குடி சென்று வீர மரணம் அடைந்த சிவச்சந்திரன் குடும்பத் தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்