புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் செய்திருந்த நேரடி ஒளிபரப்பு ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் ரத்து செய்து விட்டது. இதனால் பாசிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் 4-வது சீசன் போட்டிகள் துபை மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு உரிமத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்று ஒளிபரப்பு செய்து வந்தது.
காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டியதுடன் உலக நாடுகள் வர்த்தக, பொருளாதார ரீதியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்தது.
இதனை ஏற்று நேற்று முதல் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை ரிலையன்ஸ் நிறுத்திவிட்டது. இதனால் உடனடி மாற்று ஏற்பாடுகள் ஏதும் இன்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தவிக்கிறது. போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப் படாமல் நடப்பதால் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.