அமெரிக்கா: கடும் பனிப்பொழிவு எதிரொலியால் மின்னசோட்டா மாகாணம் ஸ்தம்பிப்பு (வீடியோ)

Advertisement

அமெரிக்கா: மின்னசோட்டா மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால், மக்கள் தங்களின் பணிகளில் ஈடுப்பட முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்தும் செயல்பட முடியாமல் ஸ்தம்பித்துள்ளது.

அமெரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மின்னசோட்டா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாகாணத்தின் தென் பகுதியில் உள்ள நகரங்கள் பனிப்பொழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சாலை எங்கும் வெள்ளை போர்வை போர்த்தியதுபோல் காணும் இடமெல்லாம் அடர்த்தியான பனி இருப்பது காண்பவர்களை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று அதிகபட்சமாக ஒவடோனா நகரத்தில் 17 அங்குலத்திற்கு அடர்த்தியான பனி ஏற்பட்டது. குறைந்தபட்சமாக சாஸ்கா எனும் நகரில் 7 அங்குலத்திற்கு பனி படர்ந்துள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணத்தால், எதிரில் வாகனங்கள் வருவதுக்கூட தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 
இதேபோல், பேருந்து, விமான சேவை உள்ளிட்டவையும் முடங்கி உள்ளது.

பனிப்பொழிவுடன் காற்றும் வீசுவதால் நிலைமை இன்னும் மோசமாகி உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மின்னசோட்டா மாகாண மக்கள் பனிப்பொழிவு குறையும் வரை வெளியில் வர வேண்டாம் என மின்னசோட்டா கவர்னர் மார்க் டய்டான் அறிவுறுத்தி உள்ளார். மேலும், பனிப்பொழிவில் சிக்கியுள்ள வாகன ஓட்டிகளுக்கு உதவுவதற்காக தேசிய பாதுகாப்பு படையினருக்கு கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

நேரடி பனிப்பொழிவு காட்சிகள் இதோ..

Advertisement
/body>