தமிழகம், புதுவை லோக்சபா தொகுதிகளில் ஏப்ரல் 18-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அன்று பதிவாகும் வாக்குகள் மே 23ந் தேதி எண்ணப்படுகின்றன.
.
இது தொடர்பான லைவ் செய்திகளின் தொகுப்பு இது:
தமிழகத்துக்கு ஏப்ரல் 18-ல் ஒரே கட்டமாக தேர்தல்
மே 23-ல் வாக்கு எண்ணிக்கை
7-ம் கட்ட தேர்தல் மே 19
6-ம் கட்ட தேர்தல் மே 12
5-ம் கட்ட தேர்தல் மே 6
4- வது கட்ட தேர்தல் ஏப்ரல் 29
3-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 23
2-வது கட்ட தேர்தல் ஏப்ரல் 18
முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11
7 கட்டங்களாக வாக்குப் பதிவு
- வாக்குப் பதிவு தொடர்பாக 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்
- பணம் தந்து செய்திகள் வெளியிடுவதை கண்காணிக்க குழு
- பூத் சிலிப்புகள் மூலம் வாக்களிக்க முடியாது
-17.4 லட்சம் ஒப்புகைச் சீட்டு இயந்திரன் பயன்படுத்தப்படும்
-தேர்தலை அமைதியாக நடத்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை குவிக்கப்படும்
-தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன
-நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச்சாவடிகள்
-யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய ஏற்பாடு
- 8.4 கோடி பேர் புதிய வாக்காளர்கள்
- நடப்பு தேர்தலில் 90 கோடி பேர் வாக்காளர்கள்
-23 மாநிலங்களில் 100% வாக்காளர் அடையாள அட்டைகள் விநியோகம்
-வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் கடைசி நாள் வரை வாக்காளர் பட்டியல் திருத்தம்
- வெளிப்படையாக தேர்தலை நடத்த விரும்புகிறோம்- சுனில் அரோரா
- அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினோம்
-17வது மக்களவை தேர்தலுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணையர்கள் அசோக் லவாசா, சுசில் சந்திரா பேட்டி
-லோக்சபா தேர்தல் தேதிகளை அறிவித்து வருகிறார் தேர்தல் ஆணையர்
-தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறக் கூடும்
- லோக்சபா தேர்தல் 7 அல்லது 8 கட்டங்களாக நடைபெறலாம்
- டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்னும் சில நிமிடங்களில் செய்தியாளர்களை சந்திக்கிறார்
-மாலை 5 மணிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு
-தமிழகத்தின் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்படுகிறது
-காஷ்மீர், ஒடிஷா, சிக்கிம் சட்டசபை பொதுத்தேர்தல் தேதிகளும் அறிவிக்கப்பட வாய்ப்பு