பொய்யைத் தவிர மோடி எதையும் பேசமாட்டார்: நாகர்கோவிலில் ராகுல் காந்தி ‘அட்டாக்’

பிரதமர் நரேந்திர மோடி பொய்யைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார் என நாகர்கோவில் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.

நாகர்கோவிலில் ராகுல் காந்தி பேசியதாவது:

2014-ம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ15 லட்சம் டெபாசிட் செய்வேன். ஆனால் அதை செய்யவில்லை.

தாம் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என்றார். அந்த வாக்குறுதி என்னானது?

டெல்லியில் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தைப் பார்த்து கலங்கிப் போனேன். அந்த விவசாயிகளைப் பற்றி மோடி கவலைப்படவில்லை.

தமிழர்களின் உரிமை, கலாசாரத்துக்கு மோடியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் தங்களது உரிமை பறிபோவதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.

தமிழர்கள் நியாயங்களுக்காகப் போராடுகிறவர்கள். பிரதமர் மோடி நாட்டு மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. கார்ப்பரேட் நண்பர்களுக்காக மட்டும் ஆட்சி செய்கிறார்.

ரஃபேல் விவகாரத்தில் பாதுகாப்புத் துறையின் ரூ30,000 கோடி நேரடியான அனில் அம்பானிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் இருந்து கொண்டு தமிழகத்தில் கொல்லைப்புறமாக ஆட்சி செய்கிறார் மோடி.

தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின்தான் வரவேண்டும். உண்மை வெல்லும்... திருவள்ளுவர் சொன்னது போல உண்மை என்பது வெல்லும்.. உண்மை என்பது நரேந்திர மோடியை சிறையில் தள்ளும்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் வேலைவாய்ப்பின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்போம். நாங்கள் உண்மையான எளிமையான ஜிஎஸ்டி வரி முறையை கொண்டு வருவோம். ஒரே வரி, எளிமையான வரி, மக்களுக்கான வரியாக அது அமையும்.

அந்த வரியால் தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள். தமிழகத்தை தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக உருவாக்குவோம்.

மேட் இன் சீனா என்று நிலைமை இருக்கிறது... அதை மேட் இன் தமிழ்நாடு என்கிற நிலைமையை உருவாக்குவோம். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்