மத்திய அரசில் தமிழகத்துக்கு சிறப்புப் பங்கு இருக்க வேண்டும் என தாம் விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடனான கலந்துரையாடலின் போது ராகுல் கூறியதாவது:
பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென் இந்தியா சிறந்து விளங்குகிறது
.
பாலின சமத்துவத்தில் தென் மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன.
நாடாளுமன்றத்தில் 33 சதவீத பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.
கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வியின் தரம் உயர வேண்டும்
நிதி ஒதுக்குவது மட்டுமல்லாமல் அந்த நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே வரியாக இருக்கும், அதுவும் குறைந்த வரியாக இருக்கும். மத்திய அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
3000 பேர் இப்படி கேள்வி கேட்டால் அவர் பதில் அளிப்பாரா?
மோடி ஒரே ஒருமுறை இப்படி கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளாரா?
இத்தனை பெண்கள் மத்தியில் அவரால் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமா?
பிரதமரை தேர்வு செய்வதில் தென்னிந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது
மத்திய அரசில் அனைத்து மாநிலத்திற்கும் பங்கு இருக்க வேண்டும்
மத்திய அரசில் தமிழகத்திற்கு சிறப்பு பங்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு ராகுல் கூறினார்.