ஆதார் இல்லாததால் சிகிச்சை மறுப்பு: மருத்துவமனை வாசலில் குழந்தை பெற்ற பெண்

ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jan 30, 2018, 17:52 PM IST

ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை அவரது உறவினர்கள் பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது மருத்துவமனை ஊழியர்கள் அப்பெண்ணின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை கேட்டுள்ளனர். ஆனால் அவரிடம் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால், மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அப்பெண் மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.

இது குறித்து அந்த பெண்ணின் கணவர் கூறுகையில், “மருத்துவமனை ஊழியர்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றை கேட்டனர். அது எங்களிடம் இல்லை என்று கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது” என கூறிவிட்டனர்.

இதனால் வேறு மருத்துவமனைக்கு செல்வதற்காக நாங்கள் வெளியே வந்த போது மருத்துவமனை வாசலிலேயே எனது மனைவிக்கு குழந்தை பிறந்துவிட்டது என்றார்.

You'r reading ஆதார் இல்லாததால் சிகிச்சை மறுப்பு: மருத்துவமனை வாசலில் குழந்தை பெற்ற பெண் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை