காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவிலும் போட்டி - பாதுகாப்பான வயநாடு தொகுதியை தேர்வு செய்தார்

congress President Rahul Gandhi contesting Wayanad Loksabha in Kerala

Mar 31, 2019, 12:38 PM IST

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான தொகுதி வயநாடு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் 2-வது தொகுதியாக வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

உ.பி.மாநிலம் அமேதி தொகுதி தான் ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதி. இந்தத் தொகுதியில் 2009,2014 தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு ராகுல் வெற்றி பெற்றார். தற்போதும் அமேதியில் ராகுல் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுலின் அமேதி, சோனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதிகளில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளன.

இதனால் அமேதி தொகுதியில் பாஜகவுடன் நேரடிப் போட்டியைச் சந்திக்கிறார் ராகுல் காந்தி. இந்த முறை ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் நடைபெறுவதால் அமேதி தொகுதியில் எப்படியாவது ராகுலை வீழ்த்த வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பான மற்றொரு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது என காங்கிரஸ் தலைவர்கள் கருதினர். இதன்படி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுமாறு கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ராகுலிடம் நேரில் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் தான் ராகுல்
வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதனை கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான ஏ.கே.அந்தோணி அறிவித்தார்.

You'r reading காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவிலும் போட்டி - பாதுகாப்பான வயநாடு தொகுதியை தேர்வு செய்தார் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை