வயதான பயணிக்காக விமானம் புறப்படுவதை தாமதப்படுத்திய ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்களின் சேவை பாராட்டைப் பெற்றுள்ளது.
அதிகாலை நேரத்தில் டெல்லியில் இருந்து மும்பைக்கு புறப்பட ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்தது. அப்போது பயணிகள் இருக்கையில் அமர்ந்த வயதான பெண்மணி ஒருவர், தனது கைப்பையை தவற விட்டதை எண்ணி பதற்றமடைந்தார். அதில் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை வைத்திருந்தார். இதனை அறிந்த ஊழியர்கள் விமானம் புறப்படுவதை நிறுத்தி வைத்து விட்டு, கைப்பையை தேடும் பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு சோதனை அறையில் கைப்பையை அப்பெண்மணி மறந்து வைத்து விட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கைப்பையை பெற்ற அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஊழியர்களிடம் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சிறிது நேர தாமதத்திற்கு பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றது. சகபயணிகளும் தாமதத்திற்கான காரணத்தை ஏற்றுக் கொண்டனர். வயதான பெண்ணுக்கு உதவிய ஏர் இந்தியா ஊழியர்களின் சேவையையும் வலைத்தளத்தில் அவர்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.