உலக பணக்கார நாடுகள் பட்டியலில் ஃபிரான்ஸ், கனடாவை முந்தி ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.
நேற்று புதன்கிழமை [30-01-18] நியூ வேர்ல்ட் வெல்த் என்ற நிறுவனம் உலக பணக்கார நாடுகளுக்கான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தனியார் நிறுவனங்கள், தனி மனிதர்கனின் சொத்து மதிப்பைக் கணக்கில் கொண்டு வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 8,230 பில்லியன் டாலர் சொத்துகளுடன் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான இந்த அறிக்கையில் 64,584 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 24,803 பில்லியன் டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 19,522 பில்லியன் டாலர்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன.
மேலும் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இங்கிலாந்தும், ஐந்தாவது இடத்தில் ஜெர்மனியும், ஏழாவது இடத்தில் ஃபிரான்ஸும், எட்டாவது இடத்தில் கனடா, ஒன்பதாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், பத்தாவது இடத்தில் இத்தாலியும் உள்ளது.
2016ஆம் ஆண்டில் இந்திய சொத்து மதிப்பு 6,584 பில்லியன் டாலர்களாக இருந்த நிலையில் ஒரே ஆண்டில் 25% கூடுதல் வளர்ச்சியுடன் 8,230 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.