நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாடெங்கும் அரசியல்வாதிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
ஒவ்வொருவரும் தங்கள் தேர்தல் அறிக்கை மற்றும் வாக்குறுதிகளை முன்வைத்தும் ஆளுங்கட்சியை விமர்சித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ஆளுங்கட்சி பாஜகவோ தங்கள் தேர்தல் அறிக்கையை விட பால்கோட் மற்றும் பதான் கோட் தாக்குதலை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது. பிரதமர் மோடி பேசும் ஒவ்வொரு கூட்டங்களிலும் இராணுவ வீரர்களை முன்னிறுத்தியே ஓட்டு கேட்டு வருகிறார். இவர்களின் கருத்துக்கு ஒத்துபோவது போல், பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சிறந்த வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் அடுத்து அமையவுள்ள இந்திய அரசாங்கம் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்தால், பாகிஸ்தானுடன் பேசுவதற்கு பயப்படலாம். பா.ஜ.க. ஒரு வலதுசாரிக் கட்சி - வெற்றி பெற்றால், காஷ்மீரில் சில வகையான தீர்வு கிடைக்கும் என இம்ரான் கான் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.