பொன்னாருக்கு டிடிவி வைத்த ஆப்பு திருப்பியடித்த பாஜக அம்பலமாகும் திரைமறைவு ரகசியங்கள்

Controversy over ttv dinakarans allegation against bjp minister ponRadhakrishnan

by Nagaraj, Apr 10, 2019, 19:49 PM IST

பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் கன்னியாகுமரி தொகுதியில் அமமுக சார்பில் டம்மி வேட்பாளரை நிறுத்துமாறு தம்மை அணுகினார்கள் என்று டிடிவி தினகரன் கொளுத்திப் போட்டது பெரும் சர்ச்சையாகி, இரு தரப்பும் பரஸ்பரம் பல ரகசியங்களை போட்டுடைத்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

குமரி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து அமமுக தரப்பில் டம்மி வேட்பாளரை நிறுத்த வேண்டும். அதுவும் சிறுபான்மை வகுப்பு வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் பொன்.ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என்று கூறி அக்கட்சியின் மாநில நிர்வாகியான கருப்பு முருகானந்தம் என்பவர் தம்மை அணுகியதாக டிடிவி தினகரன் இன்று திடீரென ஒரு குண்டு போட்டார். இந்த கருப்பு முருகானந்தம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். டிடிவி தினகரனின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் கருப்பு முருகானந்தம் தம்மை அணுகினார் என்று டிடிவி தினகரன் கூறியதில் உண்மை இருக்குமோ? என்ற ரீதியில் பாஜக தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. ஏற்கனவே கன்னியாகுமரியில் காங்கிரசின் எச்.வசந்தகுமாரின் பெரும் சவாலை சந்திக்க முடியாமல் திணறி வரும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, டிடிவி கூறியது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

இந்நிலையில் தான் தினகரன் கூறியதற்கு பதிலடியாக, பாஜக தரப்பிலிருந்து கருப்பு முருகானந்தமே ஏட்டிக்குப் போட்டியாக, தினகரன் தரப்பு தான் தம்மை அணுகியது. பிரதமர் மோடியுடன் இணக்கமாக செல்ல விரும்புவதாக தினகரன் தரப்பில் தெரிவித்தனர். அதற்கான ஆதாரங்களையும் காட்டத் தயார் என்ற ரீதியில் தினகரன் பக்கம் பந்தை வீச, அடுத்து இன்னும் என்னென்ன திரைமறைவு ரகசியங்கள் வெளியாகப் போகிறதோ? என்று பரபரத்துக் கிடக்கிறது தமிழக அரசியல் களம்.

 

ஸ்டாலினும் இலவு காத்த கிளியும் ஒன்னு- பொன். ராதா கிருஷ்ணன் காமெடி....

You'r reading பொன்னாருக்கு டிடிவி வைத்த ஆப்பு திருப்பியடித்த பாஜக அம்பலமாகும் திரைமறைவு ரகசியங்கள் Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை