கல்யாண மொய் பிரிப்பதில் தகராறு..! தந்தையை அடித்துக்கொன்ற புதுமாப்பிள்ளை

Groom murder to his father

Jun 15, 2019, 15:19 PM IST

அரியலூர் மாவட்டம் விளாங்குடி அருகே உள்ள ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளமதி. இவருக்கு வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் வைத்துச் சென்ற மொய்ப்பணத்தை இளமதியின் தந்தை சண்முகம் வைத்திருந்தார். இந்நிலையில் இன்று மொய்பணத்தை பிரிப்பது தொடர்பாக புதுமாப்பிள்ளையான இளமதிக்கும் அவரது தந்தை சண்முகத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. மொய்பணத்தை மகனிடம் கொடுக்க சண்முகம் மறுத்ததால், ஒரு கட்டத்தில் மோதலாக மாறி, தந்தை சண்முகத்தை இளமதி மரக்கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் சண்முகம் மயங்கி விழுந்ததால், போதையில் மயங்கிய விழுந்ததாக அங்கிருந்தவர்கள் நினைத்துள்ளனர். பின்னர் தான் தெரிந்ததுள்ளது தந்தையை கொலை செய்துவிட்டோம் என்று மகனுக்கு. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸ், தப்பியோடிய புதுமாப்பிள்ளையை தேடி வருகிறது.

-தமிழ் 

ஆண் உறுப்பை துண்டித்து வந்த சைகோ கொலையாளி கைது..!

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More Crime News

அதிகம் படித்தவை