தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த ஏழு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்ன சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த பருவத்தில் 44 % குறைந்ததை அடுத்து பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி வங்கக் கடலை நோக்கி தரைக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
இதனிடையே, சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ,மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பான அளவை விட 3 முதல் 4 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதிகரிக்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவும் நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் வெயில் 106 டிகிரியை எட்டக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம் பெற்ற 3 இந்திய வம்சாவளி பெண்கள்!
- தமிழ்