களையெடுத்த உ.பி. போலீஸ்: 48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர்கள்!

48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர்கள்!

by Suresh, Feb 3, 2018, 19:19 PM IST

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 18 ரெளடிகளை அம்மாநில போலீஸார் என்கவுன்டர் மூலம் களையெடுத்துள்ளனர்.

மனித உரிமை ஆணையத்திடமிருந்து கேள்விகள் குவிந்தாலும் சளைக்காமல் களையெடுப்புப் பணியைத் தொடர்ந்து வருகின்றனர் உ.பி.போலீஸார்.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்னையை சீரமைத்து பொதுமக்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே காவல்துறையின் முக்கியப் பணியாக உள்ளது. இந்த சூழலில் மாநிலத்தின் குற்ற எண்ணிக்கையைக் குறைக்க ரெளடியிஸம் குறைக்கப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு உ.பி.போலீஸார் சட்ட ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை உ.பி. மாநில போலீஸார் ரெளடிகளைத் தேடிக் கைது செய்துகொண்டிருக்கும்போது எதிர்பாரா விதமாக தற்காப்பு காரணத்துக்காக குற்றவாளிகளை சுட நேர்ந்தது. இந்த விளக்கத்துக்கு மனித உரிமைகள் ஆணையம் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்கள் எழுப்பி வந்தபோதிலும் இரண்டாம் நாளாக காவல்துறையின் என்கவுன்டர் பணி தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமையும் நடந்தது.

பொதுமக்கள் மத்தியில் காவல்துறையினருக்குப் பாராத்துகள் கிடைத்து வருகின்றன. சட்டப்படி ஒவ்வொரு என்கவுன்டருக்கும் தகுந்த விசாரணை நடத்தப்படும் என்றும் மாநில விசாரணை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

You'r reading களையெடுத்த உ.பி. போலீஸ்: 48 மணி நேரத்தில் 18 என்கவுன்டர்கள்! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை