பலவீனமாகி விட்ட மோடி! பிரியங்கா காந்தி தாக்கு!!

Advertisement

பிரதமர் மோடி தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு பலவீனமாகி வி்ட்டார் என்று பிரியங்கா காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தேசப்பாதுகாப்பு, வளர்ச்சி என்றெல்லாம் சொல்லி மோடியும் அவரது கட்சியினரும் மிரட்டுவதற்கு பயந்து விடாதீர்கள். உங்களிடம்தான் அதிகாரம் இருக்கிறது. புத்திசாலித்தனமாக யோசித்து மோடி அரசை வீழ்த்துங்கள். இந்த அரசு மக்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்தி, பிரிவினையை உண்டாக்கி வருகிறது. அன்பையும், ஒற்றுமையையும் காக்க நீங்கள் வாக்களியுங்கள்.

பிரதமர் மோடியை நீங்கள் அமெரிக்காவில் பார்க்கலாம். ஜப்பானில் பார்க்கலாம். ஜெர்மனியில் பார்க்கலாம். பாகிஸ்தானில் பார்க்கலாம். ஆனால், நம்ம சொந்த நாட்டு மக்களுடன் அவர் இருப்பதை நீங்கள் பார்க்க முடியாது. தனக்கு அதிகாரம் அளித்து ஆட்சியில் அமர்த்தியவர்களை அவர் கைவிட்டு விட்டார். நல்ல தேசத் தலைவர்கள் தங்களைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு, நாட்டு மக்களைப் பற்றியே எப்போதும் பேசுவார்கள். ஆனால், மோடி எப்போதும் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அவர் இந்த தேர்தலில் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத அளவுக்கு பலவீனமான தலைவராகி விட்டார்.

இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

வாரணாசியில் மோடியை எதிர்க்கப் போகிறாரா பிரியங்கா - காங்கிரசில் நீடிக்கும் சஸ்பென்ஸ்

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>