தண்ணீர் மட்டுமே உணவு... 5 நாட்களாக பாத்௹மில் தவித்த 7 வயது சிறுமி...! மயங்கிய நிலையில் மீட்பு

Telangana: 7 year old girl gets trapped in bathroom, survives on water for 5 days

by Nagaraj, Apr 27, 2019, 12:57 PM IST

தெலுங்கானாவில் பூட்டிய வீட்டின் பாத்ரூமில் தவறி விழுந்த 7 வயது சிறுமி,5 நாட்களுக்குப்பின் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டாள். பாத்ரூமில் இருந்த தண்ணீரை மட்டுமே குடித்து, அந்தச் சிறுமி உயிர் பிழைத்த அதிசய சம் நிகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் நாராயண் பேட் பகுதியில் வசிப்பவர்கள் சுரேஷ் - மகாதேவம்மா தம்பதியினர் .இவர்களுடைய 7 வயது மகள் அகிலா. இவர்கள் வெங்கடேஷ் என்ற ஆசிரியர் வீட்டின் பின் போர்ஷனில் வாடகைக்கு குடியிருந்தனர். கடந்த 20-ந் தேதி ஆசிரியர் வெங்கடேஷ், வீட்டைப் பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.

அந்தச் சமயம் சிறுமி அகிலா தங்கள் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தவர், திடீரென தவறி வெங்கடேஷ் வீட்டில் மேற்கூரை இல்லாமல் வெறும் நைலான் வலையால் மூடப்பட்ட பாத்ரூமிற்குள் விழுந்து விட்டாள். நல்ல வேளையாக அடி எதுவும் படாத சிறுமி, கத்தி கூப்பாடு போட்டுள்ளார். பாத்ரூம் வெளிப்புறமாக பூட்டியிருந்ததாலும், ஆசிரியரும் வீட்டில் இல்லாததாலும் சிறுமியின் கதறல் யாருக்கும் கேட்கவில்லை.

மகளைக் காணாமல் தவித்த பெற்றோர் மறுநாள் போலீசிலும் புகார் கொடுக்க, தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் பாத்ரூமில் சிக்கித் தவித்த சிறுமி அகிலா வே அங்கு கிடைத்த தண்ணீரை மட்டுமே குடித்தபடி உயிர் பிழைத்தாலும் சோர்ந்து மயங்கி விட்டாள்.

5 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பிய ஆசிரியர் வெங்கடேஷ், பாத்ரூமை திறந்த போது, சிறுமி அகிலா சுருண்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து, மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சேர்த்தனர். சிகிச்சையில் தெம்பாகி ஒரு வழியாக சிறுமி அகிலா கண் விழித்த பின்பே அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

5 நாட்களாக தன்னந்தனியாக பாத்ரூமிற்குள் சிக்கி, தண்ணீரைக் குடித்து உயிர் தப்பிய சிறுமி அகிலா பற்றிய தகவலால் அப்பகுதியே பரபரப்பாகி விட்டது.

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் உள்பட 2 பேருக்கு போலீசார் வலை

You'r reading தண்ணீர் மட்டுமே உணவு... 5 நாட்களாக பாத்௹மில் தவித்த 7 வயது சிறுமி...! மயங்கிய நிலையில் மீட்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை