நாடு முழுவதும் மோடி பக்கோடா பயிற்சி மையம் - கதறவிடும் எதிர்க்கட்சிகள்

நாடு முழுவதும் மோடி பக்கோடா பயிற்சி மையம் - மோடி, அமித் ஷாவை கதறவிடும் எதிர்க்கட்சிகள் பக்கோடாவை பற்றிமோடி பேசினாலும் பேசினார், எதிர்க்கட்சிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டார். 2018-19 பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திரமோடியிடம

Feb 7, 2018, 11:37 AM IST

உத்திரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியினர் ‘மோடி பக்கோடா பயிற்சி மையம்’ என்கிற பெயரில் தொடங்கி பக்கோடா போடுவதற்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

2018-19 பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, பிரதமர் நரேந்திரமோடியிடம் , ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, “இன்றைய தினம் இளைஞர்கள் பக்கோடா விற்று தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்றால் அதுவும் கூட வேலைவாய்ப்புதான்” என்று பதிலளித்தார்.

இது சர்ச்சையாக பேசப்பட்டது. இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்ய சொல்வதற்கு ஒரு பிரதமர் வேண்டுமா? ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைதருவேன் என்று மோடி கூறியது, இந்த “பக்கோடா” வேலைவாய்ப்பைத் தானா? என்று சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்.

பிரதமருக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமையன்று பெங்களூருவிற்கு வந்தபோது, கல்லூரி மாணவர்கள் பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையில், பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பின்போது அணியும் ஆடையை அணிந்த வண்ணம் “மோடி பக்கோடா, அமித்ஷா பக்கோடா, எடியூரப்பா பக்கோடா” என விற்பனை செய்தனர்.

அதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரிலும் பக்கோடா கடை திறந்தனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் ஆசம் கான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திலும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு, பக்கோடா தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதற்கு ஒருபடி மேலே போய், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பரேலி பகுதியில் ‘பிரதம மந்திரி பக்கோடா பயிற்சி மையம்’ என்ற பெயரில், பட்டதாரி இளைஞர்களுக்கு பக்கோடா செய்யும் பயிற்சி அளித்து, சமாஜ்வாதி கட்சியினர் நூதனப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இந்தப் பயிற்சி வகுப்பில் பட்டதாரிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நான்கு விதமான பக்கோடாக்கள் செய்ய பயிற்சி வழங்கப்பட்டது. பி.டெக்., எம்.டெக்., பட்டதாரிகளுக்கு மோடி பக்கோடாவும், எம்.பி.ஏ. மற்றும் பி.எச்.டி பட்டதாரிகளுக்கு அமித்ஷா பக்கோடாவும், எம்.காம் முடித்தவர்களுக்கு அருண் ஜெட்லி பக்கோடாவும் சமைக்க கற்றுத்தரப்பட்டது.

அதேபோல, பட்டப்படிப்பு முடித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு யோகி பக்கோடா செய்ய சொல்லித்தரப்பட்டது. “சமாஜ்வாதி கட்சியில் இருப்பவர்களுக்கு பக்கோடா செய்வதில் போதுமான அனுபவம் இல்லாததால், மூன்று தலைசிறந்த சமையல்காரர்களை அழைத்து வந்து இந்த பயிற்சி வழங்கப்பட்டது” என்று சமாஜ்வாதி கட்சியின் செய்தித்தொடர்பாளர் அடா-உர்-ரஹ்மான், செய்தியாளர்களிடம் சீரியஸாகவே கூறினார்.

You'r reading நாடு முழுவதும் மோடி பக்கோடா பயிற்சி மையம் - கதறவிடும் எதிர்க்கட்சிகள் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை