கோரக்பூர் குழந்தைகள் மரணம் மருத்துவமனை கல்லூரி முதல்வர் கைது!

கோரக்பூர் குழந்தைகள் இறந்த சம்பவம் தொடர்பாப பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையின் முதல்வர் அவரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோரக்பூர் குழந்தைகள் மரணம்

ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதிகளில் உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் உயிரிழந்தன. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு காரணமான டாக்டர். சதீஷ்குமார் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு பொறுப்பாளர் டாக்டர். கஃபீல்கான் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பாபாராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜீவ் மிஷ்ரா, அவரின் மனைவி பூர்ணிமா சுக்லா ஆகியோர் உத்தரபிரதேச சிறப்பு காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் கஃபீல்கான் வீட்டை போலீசார் சோதனையிட்டனர். இதற்கிடேயே அவர் தலைமறைவாகி விட்டார். போலீசார் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்க மறுப்பதாக சொல்லப்படுகிறது.