கருத்துக் கணிப்பு வதந்தி..மோசடி... பொய்... காங்கிரசார் சோர்ந்து விடாதீர்..! பிரியங்கா காந்தி உருக்கமான ஆடியோ!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்பது ஒரு மோசடி வேலை .. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் கவலைப்பட்டு சோர்வடைந்து விட வேண்டாம் என உருக்கமாக பேசும் ஆடியோ ஒன்றை பிரியங்கா காந்தி வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


நாடு முழுவதும் 7 கட்டங்களாக 542 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்தது, வரும் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த நாளிலேயே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புக்களை தேசிய ஊடகங்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டன.


ஒட்டு மொத்த கருத்துக் கணிப்புகளுமே 2014-ல் நடந்தது போன்றே அதிக தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கப் போவதாக கூறியுள்ளன. காங்கிரசுக்கோ குறைவான தொகுதிகள் தான் கிடைக்கும் என இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி அக் கட்சியினரை அதிர்க்கிக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கி விட்டன.
அதே வேளையில், கருத்துக்கணிப்புகள் தங்களுக்கு ஆதரவாக வெளிவந்துள்ளதால், பாஜக உற்சாகமாக இருக்கிறது.

கூட்டணி தலைவர்களுக்கு விருந்து கொடுத்து கொண்டாடும் அளவிற்கு பாஜகவுக்கு இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெம்பளித்துள்ளது எனலாம்.

இந்நிலையில் தான், இந்தக் கருத்துக் கணிப்பால் காங்கிரஸ் கட்சியினர் யாரும் சோர்வடைந்து விட வேண்டாம் என்று தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தான் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பிரியங்கா காந்தி, எனது அன்பிற்குரிய காங்கிரஸ் தொண்டர்களே, சகோதர, சகோதரிகளே.. வதந்திகளையும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

இது போன்ற மோசடியான வேலைகளைச் செய்து நமது மன உறுதியை தகர்க்கும் செயலில் சிலர் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். எனவே வாக்கு எண்ணிக்கையில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் தொண்டர்கள் செயல்படுங்கள். நமது கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் கிடைக்கும் என்று பிரியங்கா பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.

நாங்கள் என்ன கேலிப் பொருளா..? எங்களை விமர்சிக்க நீங்கள் யார்..? மீடியாக்கள் மீது எகிறிய கர்நாடக முதல்வர்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds