அகிலேஷூக்கு சி.பி.ஐ கிளீன் சிட்! பா.ஜ.க. அதிரடி ஆட்டம் ஆரம்பம்?

Advertisement

முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி, சி.பி.ஐ. திடீரென ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளது.

ஓட்டு எண்ணுவதற்குள் இந்த செய்தி வெளியானதால், மாயாவதி, அகிலேஷை இழுக்க பா.ஜ.க. முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த அரை மணி நேரத்தில் பா.ஜ.க. அணிக்கு 300 இடங்கள் வரை கிடைக்கும் என்று மொத்த மீடியாவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டன. இதனால், எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியடைந்தன. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்து வந்த சந்திரபாபு நாயுடு, கடைசியாக மாயாவதியையும், அகிலேஷையும் கூட காங்கிரஸ் பக்கமாக இழுத்திருந்தார். இதையொட்டி, மே 20ம் தேதி டெல்லியில் சோனியாவை மாயாவதி சந்திக்கவிருப்பதாக தகவலும் வெளியானது. ஆனால், கருத்து கணிப்புகளை பார்த்ததும் தனது டெல்லி பயணத்தையே மாயாவதி ரத்து செய்து விட்டார்.

அது மட்டுமல்ல. மத்தியப்பிரதேசத்தில் மாயாவதி-அகிலேஷ் கட்சிகளின் 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன்தான் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு அந்த ஆட்சி பெரும்பான்மை இழந்து விட்டதாக கூறி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முதல்வர் கமல்நாத்துக்கு உத்தரவிடுமாறு கவர்னரிடம் பா.ஜ.க. மனு அளித்துள்ளது. இதில், பகுஜன், சமாஜ்வாடி கட்சிகள் தங்கள் பக்கம் வருவதற்கு ஒரு வாய்ப்பாக பா.ஜ.க. மறைமுகத் தூது விட்டிருக்கிறது. ஆனால், இரு கட்சித் தலைவர்களுமே மே 23ம் தேதி வரை மவுனமாக இருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில், முலாயம்சிங், அகிலேஷ், அகிலேஷின் சகோதரர் பிரதீக் யாதவ் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லாததால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடப்படவில்லை என்று சி.பி.ஐ. திடீரென அவர்களுக்கு ‘கிளீன்சிட்’ கொடுத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்த புதிய அபிடவிட்டில் இது தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2013ம் ஆண்டில் கொடுக்கப்பட்ட அந்த புகாரில் அடிப்படை ஆதாரங்கள் இல்லாததால், மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பி விட்டு, பைலை மூடி விட்டதாகவும், எப்.ஐ.ஆர் போடவில்லை என்றும் அந்த அபிடவிட்டில் சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.

வாக்குகள் எண்ணிக்கை நடைபெற ஒரு நாள் இடைவெளியே உள்ள நிலையி்ல், இந்த தகவல் வெளியாகி இருப்பதால் அகிலேஷ் யாதவுக்கு பா.ஜ.க. சிக்னல் கொடுத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே, ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன்பட்நாயக், டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ் , ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ஆகியோரிடம் அமித்ஷா பேசி வருவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது. எனவே, பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் கூட்டணி ஆட்சி அமைக்க பா.ஜ.க. அதிரடி ஆட்டத்தை துவங்கியிருப்பது தெளிவாக தெரிகிறது.

டெல்லி செல்லும் மாயாவதி.... சோனியா, ராகுல் காந்தியுடன் சந்திப்பு இல்லையாம்!

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>