பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முயற்சி செய்வேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே தேர்தலின் போது மோதல்கள் நடந்தன. வன்முறை, கலவரங்கள் நடந்தன. மோடியும், மம்தாவும் மாறிமாறி மட்டமாக விமர்சித்து கொள்ளவும் செய்தனர். தேர்தல் முடிந்த பின்பும், இந்த மோதல் தீரவில்லை. இன்று(மே28) கூட, திரிணாமுல் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 56 கவுன்சிலர்களை பா.ஜ.க. தன்பக்கம் இழுத்து கொண்டது.
இந்நிலையில், கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ‘‘பிரதமரின் பதவியேற்பு விழாவில் நாங்கள் பங்கேற்கிறோம். சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அரசியலமைப்பு சட்டப்படியான மரபு. ஆனால், ஒரு நாள் இடைவெளி தான் உள்ளது. எனினும், நான் கலந்து கொள்ள முயற்சிப்பேன்’’ என்றார்.
’காலாவதி பிரதமர்’ மோடி; கலாய்த்துத் தள்ளிய மம்தா பானர்ஜி!
தேர்தல் வெற்றிக்கு ராணுவத்தை பயன்படுத்தும் பா.ஜ.க – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டம்