பிராணாப் முகர்ஜியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: ராகுலுக்கு ஜெட்லி அறிவுரை

by Rahini A, Feb 9, 2018, 10:52 AM IST

"இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்" என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவுரை வழங்கியுள்ளார்.

arun

சமீபத்தில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியினால் அமைந்த அரசு மத்திய நிதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கண்டனங்கள், சில மாநிலங்களில் போராட்டங்கள் என எதிர்ப்பலைகள் அதிகமாகவே எழுந்தன. இந்த சூழலில் 'மோடி அரசின் பட்ஜெட் மக்கள் நலனுக்கானதாக இல்லாமல் 2019 தேர்தலுக்கான பிரச்சாரமாகவே உள்ளது' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

மேலும் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தி பேசுகையில், "மோடியின் அரசு எந்த ஒரு நிதித் திட்டத்தையும் வெளிப்படைத் தன்மையுடனே செய்ய வேணும். 2016-ம் ஆண்டு 36 ரஃபேல் ரகப் போர் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையும் இருந்ததாகத் தெரியவில்லை" எனக் கூறினார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, "ஒரு ராணுவத்துக்கு நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி வாங்கும் உபகரணங்கள் குறித்த விவரங்களைப் பொது வெளியில் வெளியிடக்கூடாது. அது எதிரிகளுக்கு நாமே துப்பு கொடுத்தது போல் ஆகிவிடும். கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது இதே சூழல் ஏற்பட்டபோது நான் கூறிய பதிலைத்தான் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் கூறினார். ஆகவே நடைமுறைகளை முதலில் ராகுல் பிரணாப்பிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

 

You'r reading பிராணாப் முகர்ஜியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்: ராகுலுக்கு ஜெட்லி அறிவுரை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை