சமஸ்கிருத மொழியை பேச்சுவழக்காக வளர்க்கும் முயற்சியில் குஜராத் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.
சமஸ்கிருதம் என்ற மொழி இத்தனைக் காலமாக எழுத்துருவில் மட்டும் இருந்து வந்தது. வேதங்களிலும், மந்திரங்களிலும் மட்டுமே நடைமுறையில் இருந்து வந்த மொழியை பேச்சு வழக்கில் கொண்டு வருவதற்கான முயற்சியில் குஜராத் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.
குஜராத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தை பேச்சு வழக்காகப் பயிற்றுவிக்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன. சமஸ்கிருதத்தை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேரலாம என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வகுப்புகளுக்கான தொடக்க விழாவை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.