காளஹஸ்தியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்..! ரூ.30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

30 lakhs worth Redwood trafficking in Kaalahasthi

Jun 22, 2019, 10:03 AM IST

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ஸ்ரீ காளஹஸ்த்தி வனப்பகுதியில் செம்மரம் கடத்துவதாக செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஸ்ரீகாளகஸ்தி பிச்சாட்டூர் சாலையில் போலீசார் ரோந்து சென்றனர். வனத்தை ஓட்டிய பகுதியில் இரவு முழுவதும் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்குரிய வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கிப் விசாரணை மேற்கொண்டதில் அவர் செம்மரக் கடத்தலுக்கு பைலட்டாக உதவுவது தெரியவந்தது.

அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காளஹஸ்த்தி அருகே உள்ள காலங்கி அணைப்பகுதியில் இருந்து செம்மரங்கள் கடத்த உள்ளதாகவும் அதற்கு உதவ செல்வதாகவும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து விரைந்த போலீசார் காலங்கி அணை பகுதிக்கு சோதனை மேற்கொண்ட போது வனப்பகுதியில் இருந்து வெட்டிய செம்மர கட்டைகளை கொண்டுவந்து சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

கடத்தல்காரர்களை 4 பேரை சுற்றி வளைத்த போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் சித்தூர் மாவட்டம், காலிங்கி பகுதியை சேர்ந்த சூர்யா, பாலமங்கலம் பகுதியை சேர்ந்த துரைவேல், சூரியாய்யா, திருப்பதி அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்த நாராயணன், வரதய்யா என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 30 லட்சம் மதிப்புள்ள 28 செம்மர கட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

- தமிழ் 

You'r reading காளஹஸ்தியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்..! ரூ.30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை