நாடு முழுவதும் அரசுத்துறை அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்றது. ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
அரசுத்துறைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகள் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், சிபிஐ அதிரடி சோதனையை நடத்தியது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு என நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
குறிப்பாக வருமான வரித்துறை, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை, ரயில்வே ஆகிய துறைகளின் அலுவலகங்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் ஊழலில் திளைத்து வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்த உயர் அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.














