எந்த 56ம் உங்களை தடுக்க முடியாது.. சிதம்பரத்திற்கு மகன் அனுப்பிய கடிதம்.. பிறந்த நாள் வாழ்த்தில் பிரதமர் மீதும் தாக்கு

by எஸ். எம். கணபதி, Sep 16, 2019, 12:30 PM IST
Share Tweet Whatsapp

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு இன்று பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் கடிதம் அனுப்பியுள்ள கார்த்தி சிதம்பரம் அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆக.21ம் தேதி கைது செய்யப்பட்டு, 14 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டார். அதன்பிறகு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 19ம் ேததி அவருக்கு காவல் முடிகிறது.

இன்று அவருக்கு பிறந்த நாள். இதையொட்டி, அவரது மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் அவருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், இன்று உங்களுக்கு 74வது பிறந்த நாள். எந்த 56ம் உங்களை தடுக்க முடியாது.(அமித்ஷாவுக்கு வயது 56) இன்று சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பெரிய விழாக்களை நடத்திக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால், நீங்கள் எப்போதும் பிரம்மாண்ட கொண்டாட்டங்களை விரும்பியதே இல்லை. ஆனாலும், உங்கள் பிறந்த நாளில் உங்களை மிஸ் பண்ணுகிறோம். விரைவில் நீங்கள் வெளியே வந்து எங்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொருளாதாரச் சரிவு, ஆட்டோமொபைல் விற்பனை சரிவு உள்பட பல்வேறு விஷயங்களையும் குறிப்பிட்டு, இந்த சூழலில் பிரதமர் மோடி அரசு நூறு நாள் சாதனை என்று கொண்டாடுவதையும் தாக்கி எழுதியுள்ளார். பிரதமர் மோடி மீதும், நிர்மலா சீத்தாராமன், பியூஸ் கோயல் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் கடும் விமர்சனங்களை குறிப்பிட்டுள்ளார்.


Leave a reply