தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் மெத்தனப்போக்கால் நீட் தேர்வு எழுதமுடியாமல் போன 15 மாணவர்களுக்கு 30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவில் உள்ள ஒரு மாடல் பள்ளியில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பின்மையால் அப்பள்ளியின் 15 மாணவர்களால் 2017-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதமுடியாமல் போனது. இந்த அரசுப் பள்ளியின் மாணவர்கள் பாதிக்கப்பட்டதுக்கு இழப்பீடு வழங்கியத் தீர வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வைத்துள்ளது.
மேலும் இந்த 15 மாணவர்களுக்கு 2018-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நீட் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 15 மாணவர்களுக்கும் தலா 2 லட்சம் என மொத்தம் 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி என்ற சட்ட விதிமுறைக்கு உட்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.