இந்தியா, பாகிஸ்தான் அணு ஆயுத நாடுகள்.. டிரம்ப் எச்சரிக்கை..

India, pak Are 2 Nuclear Countries, Got To Work It Out, says Trump

by எஸ். எம். கணபதி, Sep 26, 2019, 10:32 AM IST

இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள், இரு நாடுகளும் தங்கள் பிரச்னையை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபை பொதுக்குழு கூட்டத்தின் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையே தற்போது விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்னைகளை தீர்க்க என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யத் தயாராக உள்ளேன். இருநாட்டின் தலைவர்களும் எனக்கு நல்ல நண்பர்கள். மத்தியஸ்தம், சமரசம் உள்பட எதற்கும் நான் உதவத் தயாராக இருக்கிறேன்.

இரு நாட்டு தலைவர்களிடமும் நான் நிறைய ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளேன். இருநாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதை உணர வேண்டும். இரு நாடுகளும் தங்கள் பிரச்னையை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்றார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை