அயோத்தி வழக்கு தீர்ப்பு.. சீராய்வு மனு தாக்கல்.. முஸ்லிம் அமைப்பு தகவல்

All India Muslim Personal Law Board will file a review petition in supreme court

by எஸ். எம். கணபதி, Nov 9, 2019, 12:32 PM IST

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இது எங்களுக்கு திருப்தி அளிக்காததால், சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று முஸ்லிம் அமைப்பு கூறியுள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் ேகார்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.

இது குறித்து, அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜபார்யாப் ஜிலானி கூறுகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், இந்த தீர்ப்பு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்த தீர்ப்பு தொடர்பாக எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடைபெறக் கூடாது. எங்கள் நிர்வாகக் குழு ஒப்புக் கொண்டால், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, சீராய்வு மனு தாக்கல் செய்வோம். எங்களுக்கு அதற்கான உரிமை உள்ளது. சுப்ரீம் கோர்ட் விதிகளில் இதற்கு இடம் உள்ளது என்றார்.

You'r reading அயோத்தி வழக்கு தீர்ப்பு.. சீராய்வு மனு தாக்கல்.. முஸ்லிம் அமைப்பு தகவல் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை