“ரேஷன் பொருள் வாங்க இனி ஆதார் தேவையே இல்லை”- இது டெல்லி முதல்வரின் உத்தரவு!

by Rahini A, Feb 22, 2018, 08:00 AM IST

நாடு முழுவதும் அரசு சலுகைகளைப் பெற ஆதார் அவசியம் என மத்திய அரசு வலியுறுத்திவரும் வேளையில், ‘மக்களைக் கஷ்டப்படுத்தும் ஆதார் ஒன்றும் இனித் தேவையில்லை’ என உத்தரவிட்டுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

இந்திய அரசின் சலுகைகள், மானியங்கள், நிதி உதவிகள், நலத்திட்டங்கள் என அனைத்துக்கும் ஆதார் அவசியம் என மக்களின் தேவையை உணராமல் மத்திய அரசு தொடர்ந்து அத்தியாவசத்தை விட்டு விலகி பயணத்திக் கொண்டிருப்பது வாடிக்கை.

ஆனால், மக்கள் அத்தியாவசியத்தையும் தேவையையும் மத்திய அரசால் உணர முடியவில்லை என்றால் மாநில அரசுதான் அதற்கான நிவாரணத்தை மேற்கொள்ள வேண்டும் என களம் இறங்கியுள்ளது டெல்லி அரசு.

நாடு முழுவதும் அரசின் ரேஷன் கடைகளில் ஆதார் எண்ணை இணைப்பதும் ஆதார் அட்டை வைத்திருப்பதும் அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், டெல்லியில் இந்த ஆதார் எண் பயன்பாட்டால் பெறும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர் கணக்கெடுப்பு, குடும்பத் தலைவர் கையெழுத்து, ரேஷன் பொருள் வாங்க வருபவர் கையெழுத்து என அனைத்திலும் குழப்படி நடந்துள்ளது. இதையடுத்து மக்கள் ரேஷனில் பொருள் வாங்க சிரமப்பட்டுள்ளனர்.

இதை அறிந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடனடியாக உணவு நலத்துறை அமைச்சரை வரவழைத்து அமைச்சரவையைக் கூட்டி, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருள் வாங்க ஆதார் அவசியமில்லை என உத்தரவிட்டுள்ளார். இது டெல்லிவாழ் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

You'r reading “ரேஷன் பொருள் வாங்க இனி ஆதார் தேவையே இல்லை”- இது டெல்லி முதல்வரின் உத்தரவு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை