அயோத்தி ராமர் கோயில் கட்ட ஷியா வக்பு வாரிய தலைவர் ரூ.51,000 நன்கொடை

UP Shia WaqfBoard chief donates Rs.51,000 for Ram temple

by எஸ். எம். கணபதி, Nov 15, 2019, 12:57 PM IST

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஷியா வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஷ்வி, ரூ.51,000 நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்றும், அயோத்தியில் வேறொரு பகுதியில் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ஷியா வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஷ்வி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.51000 நன்கொடை அளிப்பதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், அயோத்தி வழக்கில் நீண்ட கால பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட் சிறந்த தீர்ப்பு அளித்துள்ளது. தற்போது அயோத்தியில் பெரிய ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கியுள்ளது.

முஸ்லிம்கள் உள்பட நாம் எல்லோருக்கும் முன்னோர் ராமர் என்பதால், ராமர் கோயில் கட்டுவதற்கு வாசிம் ரிஷ்வி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரூ.51,000 நன்கொடை அளிக்கிறேன். வழக்கமாகவே கோயில்கள் கட்டுவதற்கு ஷியா வக்பு வாரியம் உதவி வருகிறது என்று தெரிவித்தார்.

You'r reading அயோத்தி ராமர் கோயில் கட்ட ஷியா வக்பு வாரிய தலைவர் ரூ.51,000 நன்கொடை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை