சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு.. பெண்கள் வருவார்களா?

பலத்த சர்ச்சைகளுக்கு இடையே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. பெண்கள் வந்தால் தடுப்போம் என்ற இந்து அமைப்புகள் கூறியுள்ளதால் பதற்றமாக காணப்படுகிறது.

கேரள மாநிலம், பந்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை உள்ளது. இங்குள்ள ஐயப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. ஐயப்பன் பிரம்மச்சாரி விரதமிருப்பதால், இந்த கோயிலில் 10 வயது முதல் 50 வயது உடைய பெண்கள் நீண்ட காலமாக அனுமதிக்கப்படுவதில்லை. இது தொடர்பான வழக்கில் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரித்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் தனியாகவும், ேராகின்டன் பாலி நரிமன், சந்திரசூட் ஆகியோர் தனியாகவும் வேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். தலைமை நீதிபதி தலைமையிலான மெஜாரிட்டி தீர்ப்பில், பொது வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது என்பது இந்த கோயிலுடன் முடிந்து விடாது. இப்பிரச்னை மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தையும் உள்ளடக்கும் என்பதால், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர். நீதிபதிகள் நரிமன், சந்திரசூட் ஆகியோர் அளித்த தீர்ப்பில் மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த தீர்ப்பில் குழப்பம் உள்ளதாகவும், இது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருந்தார். காரணம், 7 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் வரை, பெண்களை அனுமதிக்க வேண்டுமா, அப்படி அனுமதித்தால் அது நீதிபதிகள் நரிமன், சந்திரசூட் தீர்ப்பை பின்பற்றியதாகி விடாதா? என்ற கேள்வி எழுந்ததால்தான்.
இந்த சூழ்நிலையில், மண்டல மகர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதற்காக பிற்பகல் 2 மணி முதல் மலையில் ஏறுவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், சபரிமலை அடிவாரத்தில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் காவி உடையில் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, கோயிலுக்குள் பெண்களை அனுமதிக் வேண்டுமென ேபாராடம் பூமாதா பிரிகேட் திருப்தி தேசாய் மற்றும் சில மகளிர் விழிப்புணர்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு செல்ேவாம் என்று கூறியுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து அமைப்புகள், பெண்கள் வந்தால் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளன.

இதனால், பலத்த சர்ச்சைகளுக்கு இடையே சபரிமலை கோயிலில் இன்று மாலை 5 மணிக்கு தலைமை தந்திரி மகேஷ் காந்தாரு நடையை திறக்கிறார். பந்தனம்திட்டா கலெக்டர் எம்.நுகு கூறுகையில், சபரிமலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எந்த தடையுத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
More India News
kejriwal-ropes-in-prashant-kishor-for-poll-campaign-in-delhi
டெல்லி தேர்தலில் பிரச்சார வியூகம்.. பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் கெஜ்ரிவால் ஒப்பந்தம்..
curfew-relaxed-in-guwahati-for-9-hrs-as-protests-against-citizenship-law
அசாமில் ஊரடங்கு தளர்வு.. போராட்டங்கள் குறைந்தது..
dissent-grows-in-assams-ruling-bjp-agp-govt-many-leaders-quit
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு.. ஆளும் பாஜகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி போராட்டத்துக்கு ஆதரவு
anti-citizenship-act-protests-reach-west-bengal-up
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு...மேற்குவங்கம், உ.பி.க்கும் பரவியது போராட்டம்
supreme-court-judgment-sabarimala-womens-entry-case-was-not-the-last
சபரிமலைக்கு பெண்கள் போவதற்கு அனுமதியா?.. சுப்ரீம் கோர்ட் விளக்கம்
rahul-gandhi-said-that-he-will-not-apologize-for-making-comment-rape-in-india
ரேப் இன் இந்தியா.. ரேப் கேபிடல் டெல்லி.. மன்னிப்பு கேட்பது யார்?
modi-congratulated-britain-p-m-borisjohnson-for-his-election-victory
பிரிட்டன் தேர்தலில் வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
chaos-in-parliament-over-rahul-gandhis-rape-in-india-remark
ரேப் இன் இந்தியா.. ராகுல் பேச்சுக்கு எதிர்ப்பு.. பாஜக எம்.பி.க்கள் அமளி
prime-minister-pays-tribute-to-those-who-lost-their-lives-in-2001-parliament-attack
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் அனுசரிப்பு.. வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மலரஞ்சலி..
trinamool-congress-mp-mahua-moitra-moves-supreme-court-challenging-the-citizenship-amendment-act
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திரிணாமுல் எம்.பி. மனு..
Tag Clouds