ஐக்கிய அரபு அமீரக நாட்டு மக்களுக்கு இந்தியா வருவதற்கு விமான நிலையத்தில் உடனடி விசா வழங்கும் சலுகையை இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா பல்வேறு நட்பு நாடுகளுக்கு விமான நிலையங்களில் உடனடி விசா(ஆன் அரைவல் விசா) வழங்கி வருகிறது. இதன்படி, அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் முன்கூட்டியே விசா வாங்க வேண்டியதில்லை. அவர்கள் இந்திய விமான நிலையங்களுக்குள் வந்ததும் உடனடி விசா வழங்கப்படும்.
தற்போது இந்த சலுகையை ஐக்கிய அரபு அமீரக(யு.ஏ.இ) நாட்டு மக்களுக்கு இந்தியா வழங்கியுள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, டெல்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை ஆகிய 6 சர்வதேச விமான நிலையங்களில் மட்டும் யு.ஏ.இ மக்கள் உடனடி விசா பெறலாம். சுற்றுலா, கல்வி, மருத்துவம், மாநாடுகள் போன்ற காரணங்களுக்கு வருபவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.