தனக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த பிரியங்கா காந்தி, இதுவும் அரசியல்தான் என்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வி.வி.ஐ.பி.க்களுக்கு மட்டும் அளிக்கப்படும் இந்த கருப்பு பூனை படை பாதுகாப்பு, சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு இது வரை அளிக்கப்பட்டு வந்தது.
சமீபத்தில் மத்திய அரசு, இவர்களுக்கு அளிக்கப்பட்ட எஸ்.பி.ஜி. பாதுகாப்பை விலக்கி கொண்டது. அதற்கு பதிலாக சி.ஆர்.பி.எப் போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி நேற்று வந்திருந்தார். அவரிடம் செய்தியாளர்கள், உங்களுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கப்பட்டதை எப்படி உணர்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அவர் சிரித்து கொண்டே, இதுவும் ஒரு அரசியல்தான்.. இதுபோல் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.