என்கவுன்டரை ஆதரித்த ஜெயாபச்சன் மீது நடவடிக்கை கோரி மனு..

Petition filed in Supreme Court seeking SC monitored SIT enquiry into Telangana Encounter.

by எஸ். எம். கணபதி, Dec 7, 2019, 13:29 PM IST

ஐதராபாத் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், என்கவுன்டரை ஆதரித்த ஜெயாபச்சன், மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் மீது நடவடிக்கை எடுக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் கொன்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக, முறையான விசாரணை நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஐதராபாத் புறநகரில் கடந்த நவம்பர் 27-ம் தேதி பெண் கால்நடை மருத்துவர் திஷா (பெயர் மாற்றப்படுள்ளது) 4 வாலிபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்வம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மகளிர் அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவ, மாணவிகள், திரையுலகினர் என்று பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை எழுப்பினர். குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கக் கோரி, ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணிகளை நடத்தினர்.

இந்நிலையில், பலாத்காரம் மற்றும் எரிப்பு சம்பவம் தொடர்பாக முகமது ஆரிப், சிவா, சென்னகேசவலு, நவீன் ஆகிய 4 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர். அவர்களை சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் நேற்று(டிச.6) அதிகாலையில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ேபாலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றதாகவும், அதனால் என்கவுன்டரில் அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ்தரப்பில் கூறப்பட்டது.

இந்த என்கவுன்டரை பலரும் வரவேற்று, ஐதராபாத் போலீசாரை பாராட்டினர். சமாஜ்வாடி எம்.பி.யும், அமிதாப்பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன், டெல்லி பெண்கள் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் உள்ளிட்டோர் என்கவுன்டரை ஆதரித்து பேட்டியளித்தனர்.

அதே சமயம், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரின் செயல் அராஜகமானது, வேகமாக வழக்கை நடத்தி நீதிமன்றம் மூலம்தான் தண்டனை பெற்று தந்திருக்க வேண்டுமென்று அவர்கள் வாதாடினர்.

இந்நிலையில், பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் கைதான 4 குற்றவாளிகளை ஐதராபாத் போலீசார் சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப்குமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், என்கவுன்டர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் 2014ம் ஆண்டில் வகுத்துள்ள விதிமுறைகளை போலீசார் பின்பற்றவில்லை என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரியுள்ளனர்.

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள மனுவில், என்கவுன்டரை ஆதரித்த ஜெயாபச்சன், டெல்லி பெண்கள் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலங்கானா என்கவுன்டர் குறித்து சுப்ரீம் கோர்ட் ஒரு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரப்பட்டிருக்கிறது.

You'r reading என்கவுன்டரை ஆதரித்த ஜெயாபச்சன் மீது நடவடிக்கை கோரி மனு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை