குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு எதுவும் வராது..

by எஸ். எம். கணபதி, Dec 9, 2019, 14:21 PM IST

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டமசோதாவை, மக்களவையில் இன்று(டிச.9) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சட்டத்திருத்தம் சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார்.

எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் அமித்ஷா கூறுகையில், இந்த மசோதா .001 சதவீதம் கூட சிறுபான்மையினருக்கு எதிரானதல்ல. அரசியல் சட்டத்தில் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றார்.

அண்டை நாடான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களிலிருந்து மதரீதியிலான அடக்குமுறைகளை தொடா்ந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்குவதில் உள்ள நிபந்தனைகளை குறைக்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பாக குடிபெயா்ந்து இந்தியாவிற்கு வந்து வசிக்கும் இந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


More India News

அதிகம் படித்தவை