ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய படை வீரர்கள் தேசியக் கொடியுடன் அணிவகுப்பு நடத்தி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.
நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று(ஜன.26) கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதே போல், மாநில தலைநகர்களிலும் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றன.
இ்ந்நிலையில், காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மலை உச்சியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், தேசியக் கொடியை கையில் ஏந்தி குடியரசு தின அணிவகுப்பு நடத்தினர்.
பனி படர்ந்த மலையில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிரில் அவர்கள் வரிசையாக நடந்து சென்று பாரத் மாதா கி ஜெ மற்றும் வந்தே மாதரம் கோஷங்களையும் முழங்கினர்.