அறிவியல், தொழிலக ஆய்வு விஞ்ஞானிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு..

by எஸ். எம். கணபதி, Feb 15, 2020, 11:04 AM IST

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு கழக விஞ்ஞானிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். இதன் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலை, அறிவியல் சார்ந்த திட்டங்கள் போன்றவை குறித்த ஆய்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஹர்ஷவர்தன் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Leave a reply