உலக மகளிர் தின வாழ்த்துக் கூறி, தனது டிவிட்டர் பக்கத்தைச் சாதனை படைத்த 7 பெண்களிடம் ஒப்படைத்து விட்டு, விலகினார் பிரதமர் மோடி.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் தனது டிவிட்டர் பக்கத்தில்,வரும் ஞாயிறன்று, பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டகிராம், யூடியூப் ஆகிய சமூக ஊடகங்களிலிருந்த விலகிக் கொள்ளலாமா? என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். விரைவில் உங்களிடம் சொல்கிறேன் என்று பதிவிட்டார். இதற்கு மோடி ஆதரவாளர்கள் மிகவும் கவலையாக, நோ சார் என ரீட்விட் போட்டனர்.
இதன் பின்னர், அவர் அதற்கு விளக்கம் கொடுத்தார். உலக மகளிர் தினத்தன்று(மார்ச்8) நான் எனது சமூக ஊடகத் தளங்களை சமூகத்தில் சிறந்த பணியாற்றிய பெண்களுக்கு விட்டுக் கொடுக்கிறேன். அதில் உங்களுக்குத் தெரிந்த சிறந்த பெண்களின் வாழ்க்கை மற்றும் பணிகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று டிவிட்டரில் பதிவிட்டார்.
அதே போல், இன்று(மார்ச்8) தனது டிவிட்டர் பக்கத்திலிருந்து விலகினார். சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள், எனது தளத்தைச் சாதனை படைத்த 7 பெண்களிடம் ஒப்படைக்கிறேன். அவர்களுடன் பெண்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று பதிவிட்டு விலகினார்.