கூலித் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளியுங்கள்.. பிரதமருக்கு சோனியா கடிதம்

by எஸ். எம். கணபதி, Mar 24, 2020, 13:00 PM IST

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வேலையிழக்கும் கூலித் தொழிலாளிகளுக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோயால் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 500 பேர் வரை இந்த நோயில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்பட கூலித் தொழிலாளர்கள் வேலையிழந்து பொருளாதார ரீதியாக பாதிப்படைந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது.

கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் அவர்கள் நிதியுதவியை பெறத் தகுதிபெற்றவர்கள். மேலும், அந்த சட்டத்தின் கீழ் கட்டுமானத் தொழிலாளர் வாரியங்கள் கடந்த ஆண்டு மார்ச் வரை ரூ.49,688 கோடி வசூலித்திருக்கிறது.

இதில் ரூ.19,372 கோடி மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. எனவே, இந்த நிதியில் இருந்து உடனடியாக தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும்.
இவ்வாறு சோனியாகாந்தி கூறியுள்ளார்.

READ MORE ABOUT :

Leave a reply