ஊரடங்கு அமலில் உள்ளதால், வீட்டில் இருக்கும் மு.க.ஸ்டாலின், போனில் கூட்டணி கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்போனில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் ஊரடங்கு நிலை, மக்களின் தேவைகள் குறித்தும், மத்திய மாநில அரசுகளின் அறிவிப்புகள் பற்றியும் விவாதித்தார்.