பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான கவுதம் அதானியின் சொத்து ஓரே வருடத்தில் இருமடங்காக அதிகரித்து ரூ 92 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஷாங்காய் நகரில் இருந்து வெளியாகும் புகழ்பெற்ற ஹருன் குளோபல் ஏடு 2018ம் ஆண்டு சர்வதேச அளவில் உள்ள கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அதிகளவில் கோடீஸ்வரர்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை அமெரிக்காவும், 2ம் இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை இந்தியாவும் பிடித்திருக்கிறது.
இந்தியாவில் மட்டும் 131 கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் கவுதம் அதானியின் சொத்துகள் இரு மடங்காக அதிகரித்து, 1400 கோடி டாலர்களாக (ரூ.92 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. இவரின் தொழில், வர்த்தகம் 109 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என ஹருன் குளோபல் தெரிவித்திருக்கிறது.
ஆனால் இதே தருணத்தில் இந்தியாவில் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இடைய இருந்து வரும் இடைவெளி பன்மடங்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.