நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை கொரோனா வைரஸ் கற்றுத் தந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.பிரதமர் மோடி இன்று டெல்லியிலிருந்தபடியே, நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பல ஊராட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கு ஊராட்சித் தலைவர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். சமூக இடைவெளியைக் கிராமங்களிலும் பின்பற்றச் செய்ய வேண்டும். நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று படிப்பினையை கொரோனா வைரஸ் கற்றுக் கொடுத்துள்ளது.
ஒன்றே கால் லட்சம் கிராமங்களில் பிராட் பேண்ட் வசதி உள்ளது. 3 லட்சம் சேவை மையங்கள் உள்ளன. எனவே, இவற்றை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.