இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் இது வரை 824 பேர் பலியாகியுள்ளனர். 26,496 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது.உலகம் முழுவதும் பரவியுள்ள ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் 1500க்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவி வருகிறது.மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்.26) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 26,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 5804 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 824 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் இன்று வரை 7628 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 323 பேர் பலியாகியுள்ளனர். குஜராத்தில் 3071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 282 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் 2625 பேர் கொரோனாவால் பாதித்த நிலையில், 54 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 2096 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 99 பேர் பலியாகியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 1793 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதில், 27 பேர் பலியாகி விட்டனர்.
ஆந்திராவில் 1061 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 31 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானாவில் 981 பேர் பாதித்த நிலையில், 26 பேர் பலியாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 1821 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 23 பேர் பலியாகியுள்ளனர்.நாட்டில் கொரோனாவால் இதுவரை 824 பேர் உயிரிழந்த நிலையில், இதில் 40.37 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.